டில்லி,

பி.சி.சி.ஐ. நிர்வாகிகளின் வற்புறுத்தல் காரணமாகவே, கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார் என்று பீஹார் கிரிக்கெட் வாரிய முன்னாள் செயலாளர் ஆதித்ய வர்மா அதிரடி குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த வாரம் அறிவித்தார்.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வீரராக, விக்கெட் கீப்பராக அணித்தேர்வுக்கு தான் தயாராக இருப்பதாக தோனி பிசிசிஐ-க்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தார்.

தோனியின் விலகல், இது அவரது ரசிகர்களிடையே மட்டுமின்றி, ஒட்டுமொத்த விளையாட்டு ஆர்வலர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தோனி விலகல் குறித்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைமைச் செயலதிகாரி ராகுல் ஜோஹ்ரி, “ஒவ்வொரு இந்திய ரசிகர் மற்றும் பிசிசிஐ சார்பாக இந்திய அணியின் கேப்டனாக தோனி ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

ஆனால் இப்போது, “இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) நிர்வாகிகளின் வற்புறுத்தல் காரண மாகவே தோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்று அதிரடி குற்றச்சாட்டை வீசி யிருக்கிறார், ஆதித்ய வர்மா.

பீஹார் கிரிக்கெட் வாரிய செயலாலராக பதவி வகித்த இவர் வழக்கு தொடுத்ததின் காரண மாகத்தான், கிரிக்கெட்டில் நிலவும் லஞ்ச ஊழல்களை களைய பரிந்துரைகளை கேட்டு லோதா கமிட்டி அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.