தர்மபுரி மாவட்டம், குமாரசாமி பேட்டை, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயம்
தலபெருமை:
இங்கு, தைப்பூசத் திருவிழாவின் போது நடைபெறும் தேரோட்டம் விசேஷமானது. இந்த தேரை வடம்பிடித்து இழுப்பதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தல வரலாறு:
சுமார் 300 வருடங்களுக்கு முன்பு, முருகப்பெருமானை நோக்கிக் கடும் தவம் இருந்தார் சித்தர் ஒருவர். தவத்தின் போது ஒருநாள் இரவு, அவருடைய கை வேறு, கால் வேறு, உடல் வேறு எனத் தனித் தனியாகக் கிடந்தது. அதைக் கண்டு ஊரே சிலிர்த்தது; அவரை வணங்கியது.
அதையடுத்து, நான் சமாதி நிலையை அடைந்ததும், அந்த இடத்தில் முருகப்பெருமான் சிலை வைத்து, அவருக்கு ஆலயம் அமைத்து வழிபடுங்கள் ! என்று அருளினாராம் சித்தர், அதன்படி ஒருநாள் அவர் சமாதி அடைய அங்கே அழகிய சிவசுப்ரமணிய ஸ்வாமி சிலை வைத்து, ஊர்மக்கள் ஒன்றுகூடி, அங்கே முருகனுக்கு கோயில் அமைத்தனர்.
அன்று துவங்கி இன்றளவும், அனைவருக்கும் அருளையும் பொருளையும் அள்ளித் தருகிறார் முருகக் கடவுள்.
திருவிழா:
தைப்பூசத் திருவிழா.
தல சிறப்பு:
மாசி மாதத்தின் முப்பது நாட்களும், சூரியக் கதிர்கள், சிவசுப்ரமணியரின் மீது விழுந்து வணங்குவது சிறப்பு.
பொது தகவல்:
நடராஜர் சன்னதிக்கு எதிரில், சென்னகேசவ பெருமாள் காட்சி தருகிறார். அவரைத் தொழுதபடி ஆஞ்சநேயர் தரிசனம் அளிக்கிறார்.
தவிர விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேஸ்வரர், இடும்பன், வீரபத்திரர், நலவீரர்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம்.
பிரார்த்தனை:
தடைபட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், நினைத்தது எல்லாம் நிறைவேறவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள சிவசுப்ரமணியருக்கு பன்னீர், தயிர் அபிஷேகம் செய்தும், தேங்காயில் தீபமேற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
சிறப்பம்சம்:
மாசி மாதத்தின் முப்பது நாட்களும், சூரியக் கதிர்கள், சிவசுப்ரமணியரின் மீது விழுந்து வணங்குவது சிறப்பு.
அமைவிடம்:
தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள குமாரசாமிபேட்டையில் அமைந்துள்ளது.