டில்லி

த்திய எண்ணெய் வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெட்ரோல், டீசல் ஆகியவை ஜி எஸ் டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் எனக் கூறி உள்ளார்.

மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சர் தர்மேதிர பிரதான் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது :

“எண்ணெய் நிறுவனங்கள் விலையை தினமும் மாற்றி அமைப்பதில் அரசு தலையிட முடியாது.  அது தொடர்ந்து நடை பெறும்.  அதே போல வரிக் குறைப்பு என்பதும் தற்போதைய சூழ்நிலையில் யோசிக்க முடியாது. தற்போதைய அரசு செலவுக்கும், முன்னேற்ற திட்டங்கள் பலவற்றுக்கும் வரிகள் தான் கை கொடுக்கின்றன.  அப்படி இருக்க வரியைக் குறைத்தால் பல முன்னேற்ற திட்டங்கள் முடங்கிப் போகும்.

மாநில அரசுகள் மதிப்புக் கூட்டு வரியை மேலும் மேலும் உயர்த்தி வருகின்றன.  அதுவும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாகிறது.   ஜி எஸ் டி கவுன்சில் உடனடியாக பெட்ரோல் டீசலை ஜி எஸ் டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.  இதன் மூலம் பல முனை வரி விதிப்புக் குறைவதால் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருக்க உதவும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.