தனுசு ராசி நேயர்களே

 

தலைப்பிற்கு அல்லாடும் இயக்குனர்களுக்கு அடுத்து 11 தலைப்பிற்கு வழிகாட்டி இருக்கும்  தலைப்பு.

 

அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதியின் கன்னி முயற்சி.

 

கும்பகோணத்தில் மெஸ் நடத்தி சுய சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தும் கணவனை   இழந்த பாண்டியம்மாள் (ரேணுகா).

 

தன் தந்தை இறந்ததற்கு ஜாதகத்தில் இருந்த தோஷம் தான் காரணம் என்று சிறு வயதில்  தாத்தா (சங்கிலி முருகன்) சொன்னதை மனதில் வைத்துச் சிறு சிறு விஷயத்திற்கும் ஜோசியம் நாள் நட்சத்திரம் சகுனம் பார்க்கும் 70’s Kid ஆ அல்லது பார்க்கும் பெண்களுடன் சகஜமாகப் பழகி ஜாலியாக சுற்றும் 90’s Kid ஆ  என்று புரிந்துகொள்ளமுடியாத பாண்டியம்மாள்  மகன் அர்ஜுன் (ஹரிஷ் கல்யாண்)

 

 

பெற்றோர்கள் பேச்சைக் கூட  கேட்கவிரும்பாத, தன் லட்சியம் செவ்வாய் கிரகத்திற்கச் செல்வதே என்று அழகிய ரெக்கை கட்டி பறக்கும் விஜயா (டிகங்கனா சூர்யவன்ஷி)

 

ஒருபக்கம் Astrology என்று வாழும் நாயகன் மறுபக்கம் Astronomy என்று வாழும் நாயகி   இவர்கள் இருவரையும் கட்டங்கள் சேர்த்ததா அல்லது விதி வலியது என்று முடிவானதா இது தான் கதை.

 

நாயகனை விட நாயகி அறிமுக காட்சி இளமை குளுமை.  திருமணத்திற்கு முன் ஆணுடன் தனிமையில் இருப்பது என்பது சமீபகால படங்களில் சம்பிரதாயமாகிப் போனது, இதிலும் தொடர்கிறது.

 

ஜிப்ரான் இசையில் இரண்டு பாடல்கள் இனிமை.

 

சங்கிலி முருகன், மயில்சாமி, சார்லி, யோகிபாபு, ரெபா மோனிகா ஜான், முனீஷ்காந்த் என்று நட்சத்திர பட்டாளம்.

 

இதில் முனீஷ்காந்த் மட்டுமே நாயகன் நாயகிக்கு அடுத்தபடி படம் முழுக்க வருகிறார்.ரெபா மோனிகா ஜான் மனதில் நிற்கிறார்.

 

மொத்தத்தில் பொழுதுபோக்கிற்கு படம் பார்க்க வரும் ராசிகளை மீறிய எதார்த்த ரசிகர்களுக்கு மட்டுமே.