ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழப் போவதாக நடிகர் தனுஷ் வெளியிட்ட அறிவிப்பு தமிழ் திரை ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

18 ஆண்டுகாலம் ஒன்றாக வாழ்ந்தவர்கள் தற்போது திடீரென இவ்வாறு முடிவெடுத்திருப்பது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவதோடு அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனிடையே இவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்ய வேண்டும் என்று தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு முக்கிய திரை பிரபலங்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், கஸ்தூரி ராஜா இருவரிடமும் பேசியதாகவும் அவர்கள் இருவருக்கும் இடையே சாதாரண குடும்ப சண்டை தான் எனவும் இது விவாகரத்து அல்ல என்று கூறியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]