கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படத்தை YNOT ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது .
ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தனுஷுக்குத் திருமணம் நடைபெறுவது போலவும், அந்தத் திருமணத்துக்கு நடனமாடிக் கொண்டே வருவது போலவும் படமாக்கியுள்ளனர்.
இதை வைத்துப் பார்க்கும் போது தனுஷுக்கு மனைவியாக சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். 24-ம் தேதியுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என படக்குழு அறிவித்துள்ளது.