தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது .
இதனிடையே திடீரென்று நேற்று (செப்டம்பர் 24) அவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவருக்கு ஏற்கெனவே இருந்த நுரையீரல் தொற்று திடீரென்று அதிகரிக்கவே மிகவும் மோசமான நிலைக்கு அவரது உடல்நிலை சென்றது. மேலும், மூளையிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவருடைய உயிர் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1.04 மணிக்குப் பிரிந்தது.
எஸ்.பி.பி. மறைவுக்கு அரசியல் தலைவர்கள் , திரையுலகினர் மற்றும் அவர் ரசிங்கர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .
இந்நிலையில் எஸ்பிபி மறைவு குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் :-
Rip SPB sir 💔💔the voice which will echo in everyone’s house forever, a family member in every household. Ur voice and U will continue to live with us for generations to come. My condolences to his family and dear ones. Thank you sir for everything sir. you will be dearly missed
— Dhanush (@dhanushkraja) September 25, 2020
“ஆன்மா சாந்தியடையட்டும் எஸ்பிபி சார். என்றும், எல்லோருடைய இல்லங்களிலும் எதிரொலிக்கும் ஒரு குரல். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உறுப்பினர். இன்னும் பல தலைமுறைகளுக்கு நீங்களும் உங்கள் குரலும் எங்களோடு இருப்பீர்கள். அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் என் அனுதாபங்கள். அனைத்துக்கும் நன்றி சார். உங்கள் இழப்பை நாங்கள் உணர்வோம்” என தெரிவித்துள்ளார் .