https://www.instagram.com/p/B-vAiO4juU6/

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை.

திரையுலகினர் சமூகவலைத்தளத்தில் தற்போது பிசியாக உள்ளனர் .

சமீபத்தில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக சகோதரி கார்த்திகா ஒரே ஊரில் இருந்தாலும் தன்னால் தனது குடும்பத்தினரைப் பார்க்க முடியவில்லை என்பதைச் சோகமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“என் வாழ்வில் குறைந்தது 2 மாதங்களுக்கு ஒரு முறையாவது நாங்கள் ஒருவரையொருவர் பார்க்காமல் இருந்ததில்லை. எங்கள் வாழ்வில் முதன்முறையாக ஒரே நகரத்திலிருந்தும் பிரிந்திருக்கிறோம். இதற்கு முன்பு உங்களை இப்படி மிஸ் செய்ததில்லை கய்ஸ். தூய அன்பு மற்றும் குடும்பத்தோடு செலவிடும் நேரம் ஆகியவற்றுக்கு இணையாக இவ்வுலகில் எதுவுமே இல்லை. உங்களை மிகவும் நேசிக்கிறேன். மிக மிக அதிகமாக மிஸ் செய்கிறேன்”என பதிவிட்டுள்ளார் .

[youtube-feed feed=1]