விஜயுடன் மாளவிகா மோகனன் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ள ‘மாஸ்டர்’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

விஜயின், நாயகி அடுத்து தனுஷ் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

‘D 43’ என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் நரேன் டைரக்டு செய்கிறார். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல திரைப்படங்களின் ஷுட்டிங் ஆரம்பமாகியுள்ள நிலையில் தனுஷின் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

இது குறித்து மாளவிகா மோகனனிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்:

“தனுஷ் படத்தில் நடிக்க ,கொரோனா பரவலுக்கு முன்பே என்னிடம் கால்ஷீட் கேட்டனர்.

அப்போது என் கைவசம் இரண்டு, மூன்று படங்கள் இருந்தன. அந்த படங்களின் ஷுட்டிங் உடனடியாக ஆரம்பமாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் ,காரணமாக அந்த படங்களின் ஷுட்டிங் தொடங்கவில்லை.

இரண்டுமே பெரிய ‘டீம்’ சம்மந்தப்பட்ட படங்கள் என்பதால், அடுத்த ஆண்டுக்கு அந்த படங்களின் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் மீண்டும் தனுஷ் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டனர். தேதிகள் இருந்ததால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். இந்த படத்தின் ஷுட்டிங் அடுத்த மாதம் (டிசம்பர்) ஆரம்பமாகிறது” என்ற மாளவிகாவிடம், அவரது கேரக்டர் குறித்து கேட்டபோது, உதட்டில் ஆள்காட்டி விரலை வைத்து ‘கப்சிப்’ ஆனார்.

– பா. பாரதி