தமிழ் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் என அசத்தி வருபவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து தமிழ் படங்களில் பிஸியாக இருந்தாலும் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது தனுஷின் தி கிரே மேன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
மார்க் கிரேனி என்பவர் எழுதிய தி கிரே மேன் என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் அதிரடி ஹாலிவுட் படமாகும். இப்படத்தை ஆந்தோனி ரூஸோ மற்றும் ஜோயி ரூஸோ சகோதரர்கள் இயக்கி வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தனது குடும்பத்தினருடன் பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவிற்குப் பயணமானார்.
தற்போது கலிபோர்னியாவில் குடும்பத்தினருடன் அவர் நேரத்தைப் போக்கும் வீடியோ ஒன்றும், சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.