‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள படம் ‘டி43’. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தினைத் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று (01.07.2021) ஆரம்பமாகியுள்ளது.

‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றிருந்த நடிகர் தனுஷ், 4 மாதங்கள் கழித்து அமெரிக்காவில் இருந்து நேரடியாக ஐதராபாத் வந்தடைந்தார்.

அங்கு அவர் ‘டி 43’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். இவர் ஐதராபாத் விமான நிலையத்தில் வந்தடைந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.