கோவையைச் சேர்ந்த சுயதீன கலைஞர் சீவக வழுதி ஆணியில் கமல் ஹாசனையும், ஸ்டேப்ளர் பின்களால் கர்ணன் தனுஷையும் வரைந்து ’இண்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’ இடம் பெற்றிருக்கிறார்.

ஸ்டேப்ளர் ஆர்ட் நம்மூரில் அவ்வளவாக தெரியாது. வெளிநாடுகளில் இது பிரபலமானது. இந்த மாதியான விஷயங்களை செய்து முடிக்க நிறைய நேரம் பிடிக்கும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடினமான சூழலை கடக்க வேண்டியிருக்கும்.

ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட நிறைய பேரை பார்த்திருப்போம். இருந்தாலும், கர்ணன் படத்தில் சொல்லப்பட்டது மனதை என்னவோ செய்தது. அதனால் 10 லட்சம் ஸ்டேப்ளர் பின்களால் கர்ணன் தனுஷை உருவாக்கினேன் என கூறியுள்ளார் .