1981-ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘நெற்றிக்கண்’.
கவிதாலயா நிறுவனம் தயாரித்த இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக தனுஷ் பல பேட்டிகளில் கூறியிருந்தார்.
தற்போது, இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை தனுஷ் தொடங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதையில் சிறு மாற்றங்களை மட்டும் செய்து நடிக்கத் திட்டமிட்டுள்ளார் தனுஷ்.
இந்த ரீமேக்கை யார் இயக்குவது என்பது உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.