அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோணி – ஜோ ரூஸோ ஆகியோர் இயக்கும் புதிய ஆங்கிலப்படம்- ‘தி கிரே மேன்’.
டயன் காஸ்லிங், ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அவரது சகாவாக கிறிஸ் ஈவான்ஸ் நடிக்கிறார். நம்ம ஊர் தனுஷும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நெட்பிளிக்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு அடுத்த மாதம் மத்தியில் லாஸ் ஏஞ்சல்ஸ் கடற்கரையில் ஆரம்பமாவதாக இருந்தது.
இந்த முதல் கட்ட படப்பிடிப்புக்கு நீண்ட கடற்கரையில் பிரமாண்ட அரங்கம் அமைக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. இதனை அமைக்க ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆனால் அங்கு கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளதால், தொழிலாளர்களை அதிக அளவில் வேலையில் ஈடுபடுத்த முடியாது. எனவே ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பை காலவரையின்றி நெட்பிளக்ஸ் நிறுவனம் ஒத்தி வைத்துள்ளது.
கொரோனா பரவல் குறைந்த பிறகே படப்பிடிப்பு தொடங்கும்.
– பா. பாரதி
[youtube-feed feed=1]