சென்னை:
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக இதுவரை 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவை முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடரும் நிலையில், மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்தார்.