சென்னை:

னவரி 14 முதல் சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச உத்திரவிடப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட வந்த நிலையில், சிறையில் உள்ள கைதிகளை, உறவினர்களுடன் பேசி கொள்ள செல்போன் வழங்கப்பட்டது. இந்த வசதி மூலம் 14,723 கைதிகள் பயன் பெற்றனர். தற்போதும் இந்த வசதி நடை முறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், ஜனவரி 14 முதல் சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேசலாம் என தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் உத்தரவிட்டுள்ளார்.