பழனி: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த வழிப்பாட்டுத் தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பழனி முருகனை தரிசிக்க வேண்டுமானால், ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இன்று அதிகாலை முதலே தமிழகத்தில் வழிப்பாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் ஆர்வமுடனும், பக்தியுடன் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பழனி முருகனை தரிசிக்க ஆன்லைன் முன்பதி அவசியம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதன்படி,  www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அதற்கான அத்தாட்சி சீட்டு இருந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதி வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் பக்தர்கள் படி வழியாக மட்டுமே மலை ஏற முடியும் என்றும் மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கரதம், அன்னதானம் போன்ற வழக்கமான நிகழ்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகள் அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.