திருவனந்தபுரம்: சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், அய்யப்பனை தரிசிக்க 12மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சபரிமலையில், மண்டலபூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் தினசரி 60 ஆயிரம் முதல் 1லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 12ந்தேதி அன்று அய்யப்பனை தரிசிக்க 1லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு, பல்வேறு இடங்களில்,உடனடி முன்பதிவு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. பக்தர்களின் அதிகரிப்பை தொடர்ந்து, கோவில் நடை திறப்பு நேரத்தை காலை, மாலை வேளைகளில் தலா 1 மணி நேரம் அதிகரித்தும் காத்திருப்பு நிலை தொடரவே செய்கிறது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 18 மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அய்யப்பனை தரிசிக்க 18-ம படி ஏறவும், ஐயப்பனை தரிசனம் செய்யவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனாலும் பக்தர்கள் தங்களுக்கான முன்பதிவு நேரத்தில் இருந்து சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தான் தரிசனம் பெற வேண்டிய ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும், 1 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சுவாமியை தரிசனம் செய்ய காத்திருக்கும் நேரமும் அதிகரிக்க அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வருகிற 27-ந் தேதி மண்டல பூஜை நெருங்கி வருவதால் அன்றைய தினம் தரிசனத்திற்கு ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.