திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், பம்பை முதல் சன்னிதானம் வரையில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் தேவசம் போர்டு என அறிவித்து உள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஜனவரி 14ந்தேதி மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதையொட்டி, கோவில் நடை டிசம்பர் 30ந்தேதி மாலை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம், கலச பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. தொடர்ந்து ஜனவரி 19ந்தேதிவரை கோவில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மகரவிளக்கு அன்று மேலும் பல ஆயிரம் பக்தர்கள் சபரி மலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு கருதி, சபரிமலை பகுதிகளில் சமையல் செய்ய தடை விதித்து தேவசம் போர்டு உத்தரவிட்டு உள்ளதுரு.
இததொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள், மலைப்பகுதி உள்பட எந்தவொரு இடத்திலும் சமையல் அனுமதி கிடையாது என்றும், பம்பை முதல் சன்னிதானம் வரையில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்l, சமையலுக்-கு பயன்படுத்தும் பாத்திரங்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
மேலும், சன்னிதானத்திற்கு சரக்கு ஏற்றி வரும் டிராக்டர்கள் கண்காணிக்கப்படும் என்று அறிவித்துள்ள தேவசம் போர்டு, மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்தின்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதாலும், தீயினால் ஏற்படும் விபத்தை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு கருதி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.