திருவண்ணாமலை: கொரோனா தொற்று காரணமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 17ந்தேதி, 18ந்தேதி பவுர்ணமி என்பதால், அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம்.

பஞ்சபூத ஸ்தலங்களில்  அக்னி ஸ்தலமான  திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி வந்தால், புண்ணியங்கள் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஐதிகம். திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது திருவண்ணாமலை கிரிவலம் வந்து வணங்குவது மிகவும் சிறப்பு. அருணாசலேசுவரரை மனதில் நினைத்து, கிரிவலம் வருவதன் மூலம் உடலும் உள்ளமும் நலம் பெறும்

அதன்படி  இங்கு மலையையே பக்தர்கள் சிவனாக வழிபடுவதால் இந்த மலை அண்ணாமலை என்று அழைக்கப்படுவதுடன்,  மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று  லட்சக்கணக்கான பக்தர்கள்   அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள சுமார் 14 கிலோ மீட்டர் வரையிலான அண்ணாமலையை சுற்றி கிரிவலம் வருவார்கள்.

இந்த மலையை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என அஷ்டலிங்க கோவில்கள் உள்ளன. கிரிவலப்பாதையில் உள்ள அடிஅண்ணாமலை கிராமத்தில் ஆதிஅண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவில் அருணாசலேஸ்வரர் கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிரிவலத்தின்போது அனைத்து லிங்கங்களையும் ஒருசேர தரிசிப்பதால், பக்தர்களின் நினைத்த காரியம் வெற்றி பெறுவதாக நம்பப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பக்தர்களின் கிரிவலத்துக்கு மாநில அரசு தடை விதித்திருந்தது. அதன்படி கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கிரிவலம் செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, கொரோனா தொற்று குறைந்து விட்டதால், மத்திய மாநில அரசுகள், பொதுமுடக்கம் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி உள்ளது. ஆனால், முக்கவசம் இன்னும் சில மாதங்கள் அணிவது நல்லது என்று அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழிபாட்டுத்தலங்களிலும் எந்தவித கட்டுப்பாடுமின்றி பொதுமக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, இந்த மாதம், திருவண்ணாமலை கிரிவலத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சுமார் இரு ஆண்டுகளுக்கு (24 மாதங்கள்) பிறகு இந்த மாதம் (மார்ச் 2022) பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 17ந்தேதி மற்றும் 18ந்தேதி பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் செல்லாம். சரியாக கூற வேண்டுமென்றால், 17ந்தேதி பிற்பகல் 1.29 மணி முதல் 18ந்தேதி மதியம் 12.47 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கணிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆடுகளுக்கு பிறகு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுது பக்தர்களிடையே பெரும் வரவற்பையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலையில் தடையைமீறி ஸ்டாலின் மகள் கிரிவலம்… சர்ச்சை…