டெல்லி: தேவேந்திரகுல வேளாளர் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில், 7 பட்டியலின உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் அழைப்பதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வைத்த பரிந்துரையை ஏற்று ஆதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் செய்யும் மசோதாவை மக்களவையில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்தது. அதன்படி, குடும்பன், காலாடி, பன்னாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உள்பிரிவினரை இணைத்து இனி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஆதிதிராவிடர் பட்டியலினத்தில்தான் திருத்தம் செய்யப்பட்டுள்ளதே தவிர, பட்டியலின சலுகைகள் தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.