பெங்களூரு:
தென் மாநிலங்கள் செலுத்தும் அதிக வரி தொகையில் இருந்து வட மாநில மக்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், “ வட மாநிலங்களுக்கு தென் மாநிலங்கள் தொடர்ந்து மானியம் அளித்து வருகின்றன. கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய 6 தென் மாநிலங்களும் அதிக வரி செலுத்துகின்றன. ஆனால் இந்த மாநிலங்கள் குறைந்த அளவே நிதியை திரும்ப பெறுகின்றன.
உதாரணமாக, உ.பி. மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு 1 ரூபாய் வரிக்கும், ரூ. 1.79 நிதியை திரும்ப பெறுகிறது. ஆனால் கர்நாடாக மாநிலம் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும் 47 பைசாவை தான் திரும்ப பெறுகிறது. மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டியது அவசியம். இதை ஏற்றுக் கொண்டாலும் நாங்கள் உருவாக்கிய வளர்ச்சிக்கான வெகுமதி எங்கே?. அனைத்து மாநிலங்களையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு திட்டங்களை வகுக்க வேண்டும்’’ என்றார்.