மும்பை:

விவசாயிகள் பிரச்னைகளை வலியுறுத்தி வரும் 23ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

அன்னா ஹசாரே இன்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘லோக்பால் நடைமுறை, லோக் ஆயுக்தா நியமனம், விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் பென்ஷன் மற்றும் விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23-ம் தேதி முதல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன்.

ஜன்லோக்பால் மசோதா போராட்டத்துக்கு கிடைத்த ஆதரவை போல் விவசாயிகள் பிரச்னை போராட்டத்துக்கும் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.