கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

அணைத்து திரையுலகினரும் வீட்டில் செய்யும் சிறு சிறு சேஷ்டைகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் .அந்த வகையில் இயக்குநர் ராஜகுமாரன், தேவயானி தம்பதி தங்களது மகள்கள் இனியா, பிரியங்காவுடன் அந்தியூர் அருகேயுள்ள ராஜகுமாரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தங்கியுள்ளனர்…

இந்த சமயத்தில் வீட்டில் விட்டு வெளியே வராமல் இருக்கவும், கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றவும் முடிவெடுத்த தேவயானி தனது இரு மகள்களுடன் சேர்ந்து சிலம்பம் கற்று வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.