80ஸ், 90ஸ் காலங்களில் தனது குடும்ப பாங்கான அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தேவயானி.

குடும்ப பாங்கான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர். பல விருதுகளையும் பெற்றுள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது அதன் பிறகு சீரியல்களிலும் தேவயானி முன்னணி இடம் வகித்தார்.

பிரபல இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . இவர்களுக்கு அழகான இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட நடிகை தேவயானியின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. காரணம் நன்றாக வளர்ந்துவிட்ட அவரது மகள் அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.