திரிகூடேஷ்வர கோயில் வளாகம், கடக் ,கர்நாடகா
கடக் நகரத்துக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் அவசிய பார்க்க வேண்டிய அம்சம் இந்த திரிகூடேஷ்வர கோயிலாகும். இந்த கோயில் வளாகம் பல கோயில்களை உள்ளடக்கியுள்ளது. திரிகூடேஷ்வர கோயில், சரஸ்வதி கோயில் மற்றும் சோமேஷ்வரர் கோயில் போன்றவை அவற்றுள் பிரதானமான கோயில்களாகும்.
சிவபெருமானுக்கான இந்த திரிகூடேஷ்வரர் கோயில் கடக் பகுதியிலேயே புராதனமான கோயிலாகப் பெருமை பெற்றுள்ளது.   10 ம் நூற்றாண்டு மற்றும் 12ம் நூற்றாண்டில் கல்யாண சாளுக்கிய அரசர்களால் இது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்தக் கோயிலை விஜயம் செய்யும் பயணிகள் ஒரு கல்லின் மீது அமைக்கப்பட்டிருக்கும் மூன்று சிவலிங்கங்களைக் காணலாம். இந்த மூன்று சிவலிங்கங்களைக் குறிக்கும் விதமாகவே இந்த ஸ்தலம் திரிகூடேஸ்வர ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.  பிரம்மா, மஹேஷ்வரா, விஷ்ணு எனும் மூன்று தெய்வங்களை இந்த மூன்று சிவலிங்கங்கள் குறிப்பதாக சொல்லப்படுகிறது.
இவை இந்த வளாகத்தின் கிழக்கில் அமைந்துள்ளன.   நுணுக்கமான செதுக்கு வடிவமைப்புடன் கூடிய கல்லால் ஆன மறைப்புகள் மற்றும் சிறு சிற்பங்கள் ஆகியவை இந்த கோயிலில் நிறைந்து காணப்படுகின்றன. அலங்கார சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் இங்கு ஒரு முக்கியமான கலையம்சமாகும்.
வளாகத்தின் கிழக்குப்பகுதியில் பலவிதமான உருவங்களின் சிறு சிற்ப (புடைப்புச்சிற்பம்) செதுக்கல்களைக்கொண்ட பாறைப்பலகைகள் புற வடிவமைப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
திரிகூடேஸ்வரர் கோயில் தவிர்த்து இந்த வளாகத்தில் சரஸ்வதி, காயத்ரி மற்றும் சாரதா தேவி போன்ற பெண் தெய்வங்களுக்கான கோயில் ஒன்றும் உள்ளது.
இந்த கோயிலின் வடிவமைப்பு மிகப் புராதனமாக தோற்றமளித்தாலும் இங்குள்ள சிலைகள் பிற்காலத்திய பாணியில் உருவாக்கப்பட்டுள்ளன.திரிகூடேஷ்வரர் கோயில் வளாகம் கடக் பகுதிக்குச் சுற்றுலா வரும் பயணிகள் தவறாமல் பார்க்கவேண்டிய ஸ்தலமாகும்.