திருக்கானபேர்.(காளையார் கோயில்)
இத்தலத்தில் மற்று எங்கும் இல்லாத வகையில் மூன்று கருவறை உள்ளது. மூன்று கருவறையும் தனித்தனி ஆலயங்களாக உள்ளது. மூன்று கருவறை இறைவருக்கும் மூன்று அம்மன் சன்னதி உள்ளது.
- காளீஸ்வரர்-சொர்ணவல்லி
2.சோமேசர்-சௌந்தரநாயகி
- சுந்தரேஸ்வரர்-மீனாட்சி.
இறைவன் இறைவியார் இவ்வாலயத்தில் உள்ளனர். இறைவன் காளை வடிவம் கொண்டு கையில் பொற்செண்டும் திருமுடியில் சுரியுங் கொண்டு சுந்தரருக்குத் தந்தது
கானப்பேர் என்று கூறி தாம் இருக்கும் இடத்திற்குச் சுந்தரரை அழைத்தார் இத்தல இறைவன். ஐராவதம் வழிபட்ட திருத்தலம். இந்த ஆலயங்களில் தேவாரப் பாடல் பெற்ற தலம் காளீஸ்வரர்.
காளையார் கோவில் எதிரில் மருதுபாண்டியர் சமாதி உள்ளது. மருது பாண்டியரைக் கைது செய்ய எண்ணி ஆங்கிலேயர்கள் அவர்கள் வந்து சரண் அடையாவிட்டால் கோபுரத்தைத் தகர்த்து விடப்போவதாகப் பறைசாற்ற இவ்வாலயத்தை காப்பதற்காகச் சரணடைந்து தன் உயிரையே தந்துள்ளார் மருது பாண்டியர்.
சோமேசர் சன்னதியில் மேல் நின்று பார்த்தால் மதுரை தெரியுமாம். பண்டாசுர வதத்தின் பின் காளி .காளிதாசரை வழிபட்டு கரிய உருவம் மாறி சொர்ணவல்லியாக மாறி இறைவனை மணந்த தலம். நந்தியிடம் சாபம் பெற்ற ஐராவதம் இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவனிடம் சாபம் நீங்கப் பெற்றது.
இத்தலத்தில். 3 ஆலயங்களுக்கும் தனித்தனி பிரமோற்சவம் நடைபெறுகிறது. சம்பந்தர் சுந்தரர் பாடல் பெற்ற திருத்தலம். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய திருத்தலம்.