சென்னை

தீபாவளிக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த விவரம் இதோ

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் இந்த ஆண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சென்னையில் தங்கி இருக்கும் வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி விட்டனர். சுமார் 10 லட்சம் பேர் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை முதலே பலரும் சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர்.மேலும் நாளை இரவு வரை ஏராளமான மக்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது தமிழக போக்குவரத்து கழகம். பயணிகளின் வசதிக்காக 11,176 சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது.

மேலும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து திருச்சி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.

நேற்று திருச்சி நோக்கி செல்லும் சிறப்பு ரயில் (எண். 06191) தாம்பரத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கும், கன்னியாகுரி நோக்கி செல்லும் ரயில் (எண். 06049)தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கும், மதுரை நோக்கி செல்லும் ரயில் (எண். 06075) மாலை 5.10 மணிக்கும் புறப்பட்டது. இதை போல இன்றும் சிறப்பு ரயில்கள் இதே நேரத்தில் இயக்கப்படுகிறது. பயண்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த ரயில்களை பயன்படுத்தி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.