அறிவோம் தாவரங்களை – பரங்கி கொடி

Pumpkin Patch

பரங்கி கொடி (Pumpkin)

வயல் வெளிகளில் தோட்டங்களில் வளர்ந்திருக்கும் படர் கொடிநீ!

சர்க்கரைப் பூசணி, சர்க்கரைப் பறங்கி, மஞ்சள்பூசணி எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் பசுமை கொடி நீ!

மென்மையான மயக்கமூட்டி நீ! காய்ச்சல் ,தீப்புண்கள் கொப்புளம்,சிறுநீர் பெருக்கம், நாடாப் புழுக்கள் மற்றும் வயிற்றுப் பூச்சிகள், பித்தப்பை கோளாறு, மலச்சிக்கல், வீக்கம் தூக்கமின்மை, கொழுப்பு குறைப்பு, உயர் ரத்த அழுத்தம், உடல் சூடு, கல்லீரல், முடி உதிர்வு, மூல நோய் ,முகக் கரும்புள்ளி, சளி, காய்ச்சல் ஆகிய வற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

குழம்பு, கூட்டு, பொரியல், மசாலா, சூரணம் எனப் பல்வகையில் பயன்படும் நல்வகை காய்கொடி நீ!

ஒற்றைத் தலைவலிக்கு எண்ணெய் தரும் வித்தை கொடியே!

குளிர்ச்சி மிகுந்த காய் கொடியே!

சுண்ணாம்புச் சத்து மிகக் கொண்ட குண்டுக்காய் கொடியே!

பொங்கல் பண்டிகையின்படையல் காயே!

ஏக்கருக்கு 30 டன் காய்கள் கொடுக்கும் வேளாண் கொடியே!

சுமார் மூன்று லட்சம் வரை லாபம் தரும் பணப்பயிரே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க! உயர்க!

நன்றி : பேரா. முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

☎️9443405050