சென்னை

ன்று பிரதமர் மோடி தமிழகம், டில்லி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர்களுடன் காணொளி ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார்.

கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.  கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.  இம்மாநில முதல்வர்களுடன் இன்று மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்காக எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு விளக்கம் அளித்துள்ளார்.  முன்னதாக தமிழகத்தின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து நினைவூட்டி உள்ளார்.

முதல்வர் பிரதமருக்கு அளித்த கோரிக்கைகள் மற்றும் நினைவூட்டல் :

மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.3000 கோடி அளிக்கக் கோரிக்கை

கொரோனா பாதிப்பு மற்றும் பின் விளைவுகளுக்கான 9000 சிறப்பு நிவாரணங்கள் ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை

மார்ச் மாத ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் தேசிய உள்துறை மேம்பாட்டுக்கான நிதி நிலுவை அளிக்கக் கோரிக்கை

உடனடி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி வழங்கக் கோரிக்கை

தமிழகத்தின் வெளிநாட்டு உதவியின் கீழ் உள்ள திட்டங்களுக்கு  அனுமதி

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி குழுமத்துக்கு ரூ.1000 கோடி வழங்கச் சிறுதொழில் நிறுவன  வங்கிக்கு உத்தரவிட கோரிக்கை

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்க உணவு தானியங்கள் ஒதுக்கீடு அதிகரிப்புக்குக் கோரிக்கை

மின் வாரியத்துக்கு கூடுதல் நிவாரண உதவி அறிவிக்கக் கோரிக்கை

நெல் கொள்முதலுக்கு வழங்கப்படும் ரூ.1321 கோடி உதவித் தொகையை உடனடியாக வழங்கக் கோரிக்கை

உள்துறை மற்றும் ஊரக நிர்வாக அமைப்புக்கு 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதி உதவியில் 50% இப்போது வழங்கக் கோரிக்கை

2020-21 ஆம் ஆண்டுக்கான தொகையில் முன் கூட்டியே பெற்ற தொகைக்கு வட்டி தள்ளுபடி

கொரோனா குறித்து பிரதமருக்கு முதல்வர் அளித்த தகவல்கள் :

சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு மேலும் 17500 கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் தற்போது 20706 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக மரண விகிதம் 1.09% ஆக உள்ளது.

இதுவரை 26782 பேர் குணமடைந்து குணமடைந்தோர் விகிதம் 55.8% ஆக உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 3533 வெண்டிலேட்டர்கள் உள்ளன. அவற்றில் 630 தனியார் வசம் உள்ளன.

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் 18  மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் இல்லை.

அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் 175 தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன

என முதல்வர் தெரிவித்துள்ளார்.