அறிவோம் தாவரங்களை – வரகு
வரகு (Panicum miliaceum)
ஆப்பிரிக்கா உன் தாயகம்!
அனைத்து நிலங்களிலும் வளரும் அற்புதத் தானியப் பயிர் நீ!
ஆயிரம் ஆண்டுகள் வரை முளைப்புத் திறன் கொண்ட அதிசயத் தானியப் பயிர் நீ!
சர்க்கரை நோய், மூட்டு வலி, கல்லீரல் நோய், சிறுநீரக நலம்,நிணநீர் சுரப்பி குறைபாடு, மூலம், மாதவிடாய், ரத்த ஓட்டம், மலச்சிக்கல், ஆண்மைக் குறைபாடுகள், இதய நலம், உடல் எடை குறைப்பு, நீரிழிவு நோய், வீக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், புளியோதரை, கொழுக்கட்டை எனப் பல்வகையில் பயன்படும் நல்வகைத் தானியப் பயிர் நீ!
“ஈன்ற மயில் பேடையை ஒத்த வரகு கதிர்” எனக் கபிலர் போற்றி புகழும் கற்பகப் பயிரே!
ஏக்கருக்கு 15 மூட்டை விளையும் இனிய பயிரே!5.மாதத்தில் அறுவடைக்கு வரும் அழகு பயிரே!
கோவில் கும்பத்தில் நிரப்பப்படும் தானியப் பயிரே!
இடைவிடாமல் கோபுரத்தில் இடிவிழாமல் காக்கும் இடிதாங்கியே!
விரைவில் செரிமானம் ஆகும் சிற்றரிசி, சிறுதானிய பயிரே!
கோதுமையை விட நார்ச்சத்தும் மாவுச்சத்தும் அதிகம் உள்ள அதிசயத் தானியப் பயிரே!
பண்டைய தமிழரின் உணவு தானியப் பயிரே!
ஏழு அடுக்கு தோலுடைய இனிய தானியமே!
கால்நடைகளும் பறவைகளும் உண்ண முடியாத உயர் வரகுப் பயிரே!
ஆரோக்கியத்தை தரும் அற்புதப் பயிரே!
சக்தியைக் கொடுக்கும் சத்துப் பயிரே!
வீடுகளின் கூரைத்தாள் பயிரே!
கோடைக்கால குளிர்ச்சி தானியப் பயிரே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்
நெய்வேலி.
📱9443405050.