அறிவோம் தாவரங்களை – ரணகள்ளி செடி
ரணகள்ளி செடி.(Kalanchoe pinnata)
எல்லாநாடுகளிலும் வளர்ந்திருக்கும் நல்ல கள்ளிச் செடி நீ!
வறண்ட சமவெளிகளில், மலைகளில் தானே வளரும் செடி நீ !
ஜூலியஸ் சீசர் காலம் தொட்டு ஜொலித்து வளரும் மருத்துவ செடி நீ!
சிறுநீரக கற்களைக் கரைக்கும் மருந்து செடி நீ!
2008 கள்ளி வகைகளில் நீயும் ஒன்று!
ஒரு தீ. உயரம் வளரும் உன்னத செடி நீ!
தேள் கடி ,பாலுண்ணி, மரு, கபவாதம் ,நரம்பு வாதம், குன்ம நோய், அஜீரணம், வயிற்றுப் புண், வாய்வுத் தொல்லை, குடல் புண்கள், தோல் நோய்கள், மேகப்படை, கிரந்தி நோய்கள், தலை முடி வளர்ச்சி ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
மனித நாக்கு வடிவ இலைகள் உடைய புனித. செடியே!
‘கட்டிப் போட்டால் குட்டி போடும்’ என்ற விடுகதைக்கு விடையான தொட்டிச் செடியே!
பால் விடியாத கள்ளிச்செடியே!
கால்நடைகள் கடித்து உண்ணாத மேல் வகை தாவரமே!
நீர்ப்பற்று நிறைய உடைய இலை செடியே!
இலைவிளிம்பில் கன்று வளரும் புதுமைச் செடியே!
வண்ண மலர் கொடுக்கும் சின்ன செடியே!
விதையற்ற தாவரமே!
ஆண்டு முழுவதும் பூப் பூக்கும் அழகு செடியே!
மூலிகை வகைச் செடியே!
அழகுக்காகவும் வளர்க்கப்படும் அலங்கார செடியே!
இயற்கை கொசுவிரட்டியே!
மனித நாக்கு வடிவ இலைகளை உடைய புனித செடியே!
நீவிர் பல்லாண்டு!வாழ்க!வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்
நெய்வேலி.
📱9443405050.