சென்னை
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த விவரம் இதோ
வாரந்தோறும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியானாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். எனவே இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாகியுள்ளன என்பதைக் காணலாம்.
இயக்குனர் ஷிஜின்லால் இயக்கத்தில் சோனியா அகர்வால் நாயகியாக நடிக்கும் திரில்லர் திரைப்படம் ‘கிராண்மா’. இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் புகழ் யுகேந்திரன் நடிப்பில் உருவான ‘காழ்’ திரைப்படம் வெளிநாடு வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதை காட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.
குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்துள்ள படம் ‘வெப்பன்’. இப்படம் வருகிற 26 ஆ, தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
விக்ரம் பட் இயக்கத்தில் அவிகா கோர் நடித்த ஹாரர் படம் ‘பிளடி இஷ்க்’. இப்படம் வருகிற 26 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
அமெரிக்க அனிமேஷன் தற்காப்புக் கலை நகைச்சுவைத் திரைப்படமான ‘குங்பூ பாண்டா 4’ ஜியோ பிரீமியம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.