இலம்பையங் கோட்டூர் (எலுமியன்கோட்டூர்)
இறைவர் :கனக குசாம்பிகை உடனமர் தெய்வ நாதேஸ்வரர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவிற்கோலம் சிவ தலத்தில் இருந்து தென்மேற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. விநாயகரை வணங்காமல் இறைவன் சென்றதால் அவருடன் தேவர்கள் விநாயகரை வழிபடாமல் சென்றதால் விநாயகப் பெருமான் தேர் அச்சை முறித்தார் தேர் நிலை குலைந்து சாய்ந்தது.தேர் விழாமல் மகாவிஷ்ணு தாங்கிப் பிடித்தார்.
அப்போது சிவபெருமான் கழுத்திலிருந்த கொன்றை மாலை கீழே விழுந்த இடத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். என்று இத்தல தலபுராணம் கூறுகிறது. தேவர்களைக் காக்க இறைவன் தலைமையேற்று திரிபுர சம்காரம் செய்ததால் தேவர்கள் வழிபட்டதால் இத்தல இறைவன் தெய்வநாயகேஸ்வரர் என்று பெயர். பெற்றார் என்று கூறப்படுகிறது.
தேவலோக மங்கையான அரம்பை இத்தல இறைவனைப் பூஜித்து தனக்கென்று மாறாத இளமை வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று. திருஞானசம்பந்தர் ஏனைய தொண்டை நாட்டுத் தலங்களை வழிபட்டு விட்டு இத்தலம் வழியே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அருகே இவ்வாலயம் இருப்பதை அறியாமல் செல்ல இறைவன் சிறு பிள்ளையாகும் பின் ஒரு முதியவர் போன்றும் தோன்றி வழிமறித்து இக்கோயில் இருப்பதை உணர்ந்த கூட வந்த அடியார்கள் அதை அறிந்து கொள்ளவில்லை. அவர்களின் பயணத்தைத் தொடர்ந்த போது இறைவன் பசுவாக வந்து சம்பந்தரின் பல்லக்கைச் செல்ல விடாமல் வழியை மறைக்கப் பசு செல்லும் வழியிலேயே பின் செல்லப் பசு மறைந்தது பசுவாக வந்தது இத்தலத்தை உணர்த்தியது இறைவனே என்று அறிந்தார் ஞானசம்பந்தர்.
இத்தலத்தின் தேவாரத்தில் இந்நிகழ்வை ஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். இவ் ஆலயத்திற்கு வெளியே இரண்டு தீர்த்தங்கள் உள்ளன ஒன்று சந்திர தீர்த்தம் மற்றொன்று மல்லிகை தீர்த்தம் தட்சன் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கியுள்ளார்.
ஏப்ரல் மாதத்திலும் செப்டம்பர் மாதத்திலும் இறைவன் மேல் சூரிய ஒளிக் கற்றைகள் சுவாமி மீது படுகின்றன. இவ்வாலயத்தில் மட்டுமே வருடத்திற்கு இரண்டு முறை நிகழ்வு நடக்கிறது.