டில்லி

ந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் குறித்த விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது,

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.    முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும்  கொரோனா முன் கட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.  மார்ச் 1 முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி  போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தில் முதலில் 60 வயதைத் தாண்டியவர்களுக்கும் 45 வயதைத் தாண்டி இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.  அதன்பிறகு ஏப்ரல் 1 முதல் 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படு வருகிறது.

மூன்றாம் கட்டமாக 18 வயதைத் தாண்டியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மே மாதம் 1 ஆம், தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.  போதுமான அளவு தடுப்பூசி மருந்து இல்லாததால் மிகச் சில இடங்களில் மட்டுமே இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதில் இதுவரை 18,04,57, 579 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விவரம் பின் வருமாறு

சுகாதாரப் பணியாளர்கள்                   முதல் டோஸ்          19,27,560

                                                                        இரண்டாம் டோஸ்           66,22,040

முன் களப் பணியாளர்கள்                    முதல் டோஸ்          1,43,65,871

                                                                        இரண்டாம் டோஸ்           81,49,613

18 – 44 வயதுடையோர்                            முதல் டோஸ்          42,58,756

45- 60 வயதானோர்                                  முதல் டோஸ்          5,68,05,772

                                                                        இரண்டாம் டோஸ்`87,56,313

60 வயதுக்கு மேற்பட்டோர்                   முதல் டோஸ்          5,43,17,466

                                                                        இரண்டாம் டோஸ்           1,75,53,918

                        மொத்தம்                                                                 18,04,57,579