மும்பை: மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை பகுதிவாரியாக வெளியிட்டுள்ளார் அம்மாநில சுகாதார அமைச்சர்.

அவர் வெளியிட்டுள்ள விபரங்களின்படி;

புனே – 10 பேர்
மும்பை – 5 பேர்
நாக்பூர் – 4 பேர்
யவட்மால் – 2 பேர்
கமோதி – 1 நபர்
தானே – 1 நபர்
கல்யாண் – 1 நபர்
நகர் – 1 நபர்
நவி மும்பை – 1 நபர்

இந்த விபரங்களின்படி பார்த்தால், அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 26ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 100ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது என்ற கவலைதரும் தகவலும் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து, பல மாநிலங்கள் சார்பில் பல்வேறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

[youtube-feed feed=1]