சென்னை

ன்று திறக்கப்பட உள்ள சென்னை போயஸ் தோட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தில் என்னென்ன உள்ளன என்பதை இங்கு காண்போம்

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடான வேதா இல்லம் சுமார் 10 கிரவுண்ட் பரப்பளைல் கட்டப்பட்டுள்ளது.  ஜெயலலிதாவின் அதிகாரபூர்வமான இந்த இல்லம் தற்போது அவருடைய நினைவிடம் ஆக்கப்பட்டுள்ளது.,  இந்த நினைவு இல்லத்தை இன்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க உள்ளார்.  ஒரு காலத்தில் இந்த இல்லத்துக்கு வராத அதிகாரிகளே இல்லை.  அத்துடன் அகில இந்திய அளவில் பல அரசியல் தலைவர்களும் இங்கு வந்துள்ளனர்.

இந்த நினைவில்லம் குறித்த விவரங்கள் இதோ.

இந்த வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் நீண்ட ஹால், அதன் அருகே ஒரு சிறிய மீட்டிங் ஹால் உள்ளன.  அவற்றின் அருகே அமைச்சர்கள், அதிகாரிகள் அமரும் அறை. பிறகு மாடி ஏறும் இடத்தில் மற்றொரு மீட்டிங் ஹாலும் அதன் அருகே மீட்டிங் வருபவர்கள் அமர்வதற்காக ஒரு அறையும் உள்ளன .வீட்டில் எல்லா இடங்களிலும் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

அதன் பிறகு முதல் தளத்திற்கு படி ஏறியவுடன் ஜெயலலிதாவிற்கு பிடித்தமான நூலகம் இருக்கும். ஜெயலலிதாவுக்கு புத்தக வாசிப்பு மிகவும் பிடிக்கும் என்பதால் 8,376 புத்தகங்களுக்கு மேல் தனது நூலகத்தில் வைத்திருந்தார்.  புத்த்தகங்களின் மதிப்பு 40 லட்ச ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நூலகத்துக்கு அருகே மற்றுமொரு சிறிய மீட்டிங் ஹாலும் அதைத்தாண்டி ஜெயலலிதாவின் அறையும் அருகே சசிகலா தங்கியிருந்த அறையும் உள்ளன. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, முதல் தளத்தில் கட்சிப் பணிகள் நடைபெறும். அதனால் அவரது நேர்முக உதவியாளர்களின் அலுவலகங்கள் அங்கு செயல்படும்.

அதற்கும் மேலே இரண்டாம் தளத்தில் முதலமைச்சருக்கான அலுவலகம் செயல்பட்டு வந்தது. இப்படி பல்வேறு அம்சங்களை கொண்டு அதிகார மையமாக திகழ்ந்த வேதா இல்லம் இன்று திறக்கப்படுகிறது.