அறிவோம் தாவரங்களை – சிறு கீரைச்செடி
சிறுகீரைச்செடி. (Amaranthus campestris)
தமிழகம் உன் தாயகம்!
தோட்டங்களில் வீடுகளில் பயிரிடப்படும் கீரைச்செடி நீ!
குப்பைக்கீரை உன் இன்னொரு பெயர்!
20 செ.மீ. வரை உயரம் வளரும் இனிய செடி நீ!
செம்மண், மணல் கொண்ட இரு மண் பாட்டு நிலங்களில் வளரும் இனிய செடி நீ!
காசநோய், சிறுநீர்ப் பிரச்சனை, மூலநோய், மாலைக் கண், வாயு, காயம், வாத நோய், இதய நலம், நீரிழிவு நோய், ஆண்மை குறைபாடு, அஜீரணம், சொரி, சிரங்கு, படை, கண் புகைச்சல், முகப்பரு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
பருப்பு, கூட்டு, பொரியல், சூப், கஷாயம் எனப் பல்வேறு வகையில் பயன்படும் கீரைச்செடி நீ!
50 நாட்கள் வரை வாழும் அற்புத கீரைச் செடியே!
இரும்புச் சத்து, கால்சியம்,சுண்ணாம்பு சத்து கொண்ட இனிய செடியே!
மெல்லிய தோற்றம் கொண்ட மேன்மை கீரைச் செடியே!
எலும்பை வலுவாக்கும் இனிய செடியே!
உடலை வலிமைப்படுத்தும் உன்னத செடியே!
அழகையும் பொலிவையும் தரும் அற்புத செடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க!உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
நெய்வேலி.
📱9443405050.