அறிவோம் தாவரங்களை – வெங்காயம்
வெங்காயம். (Allium Cepa)
தெற்கு, மத்திய ஆசியா உன் தாயகம்!
5000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இதழ்த் தாவரம்!
எகிப்து மக்களின் வழிபாடு மற்றும் சடங்குப் பொருள் நீ!
பிரமிடுகளின் கலவைப் பொருள்!
பிரமிடுத் தொழிலாளர்களின் உணவு பொருள்!
கி.மு.6.ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு விஜயம் செய்த புதிய மாப்பிள்ளை!
இந்தியா, சீனா, அமெரிக்கா ஆஸ்திரேலியா நாடுகளில் அதிகம் விளையும் உற்பத்திப் பொருள்!
’இஸ்ரேல் மக்களின் இனிய உணவு’- எனப் ‘பழைய ஏற்பாடு’ பறைசாற்றுகிறது!
ஓட்டப்பந்தய வீரர்களின் ஊக்க மருந்து!
ஐரோப்பிய மக்களின் அரிய மரக்கறி!
வெங்காயப் பஜ்ஜி, சட்னி, சாம்பார், வடை, ஊறுகாய் என மக்கள் பசியாற்றும் தீனிப்பொருள்!
கண் பார்வையை அதிகரிப்பாய்!
உறக்கத்தை உண்டு பண்ணி, வாய்ப் புண்ணை ஆறச் செய்வாய்!
மூட்டுவலி, பல்வலிகளுக்கு ஏற்ற நாட்டு மருந்து!
நாய்க்கடிக்கும் நல்ல நிவாரணி!
புற்றுநோய்க்கு ஏற்ற சித்தமருந்து!
குளவி, தேனீ கொட்டுகளுக்குச் சாறு கொடுக்கும் வள்ளல் நீ!
90 லட்சம் ஏக்கரில் 170 நாடுகளில் பயிரிடப்படும் கற்பகச் செடியே!
மலிவாகக் கிடைக்கும்மருந்துபொருளே!
உரிக்கும்போதே கண்ணீரை வரவழைக்கும் செரிமானப்பொருளே!
6 மாதம் வரை அழியாமல் கிடக்கும் பெட்டகமே!
தந்தை பெரியார் அடிக்கடி பயன்படுத்தும் மந்திர வார்த்தையே!
நீவிர் சொந்தம்,உறவுகள் வாழும்வரை சுகமாய் இதமாய் வாழியவே!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
நெய்வேலி.
📞9443405050.