சென்னை

ல குடுபக்களை டாஸ்மாக்கால் அழிப்பதும் இனப் படுகொலை என நா த கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் பெண் என்னும் பேராற்றல் என்னும் பெயரில் கருத்தறங்கம நடந்துள்ளது.  சர்வதேச மகளிர் தினத்திய்ட்டி நேற்று முன் தினம் ந்டந்த இந்த கருத்தரங்கில்  மாநில ஒருங்கிணைப்பாளர் அனிஸ் பாத்திமா மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகா, சீதாலட்சுமி, விஜயலட்சுமி, டாக்டர் இளவஞ்சி, சமூக செயற்பாட்டாளர் நாச்சியாள் சுகந்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 

“பெண்களுக்கு அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலும்  சம வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துத்தான் போட்டியிட போகிறோம். அதிலும் பெண்களுக்குச் சம வாய்ப்பு வழங்க உள்ளோம்.

பெண்களின் பங்களிப்பு தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சி பெற்று வரும் காலத்தில் பெரிதும் அவசியம் ஆகும். ஒரு பெண் தனக்கான உரிமையைப் பேசாமல் வேறு யார் பேசுவது?  அவர்களிடம்  ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்துவிட்டால் தனக்கான உரிமையைத் தானே பேசிக்கொள்வார்கள். எங்கள் கட்சி ஆட்சி அமைத்தால் அமைச்சரவையிலும் பெண்களுக்கு சரிபாதி வாய்ப்பு வழங்கப்படும்.

தமிழகத்தில் டாஸ்மாக்கால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. குண்டு வைத்து கொலை செய்வது மட்டும் இனப் படுகொலை இல்லை;  மக்களை மதுவைக் குடிக்கவைத்து கொலை செய்வதும் இனப் படுகொலைதான்.  ஆனால் டாஸ்மாக் மூலம் பொருளாதாரம் ஈட்டுவதைத் தவிர ஆட்சியாளர்களிடம் வேறு எந்த திட்டமும் இல்லை.

என உரையாற்றி உள்ளார்.