சென்னை

ற்போது வங்கக் கடலில் நிலக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கிறது.

சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 30 கிமீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருந்தது.  அது தற்போது கரையைக் கடந்து கொண்டு உள்ளது.   இதையொட்டி பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இது முழுவதுமாக கரையைக் கடக்க இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.   இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தரைக் காற்று பலமாக வீசக்கூடும் எனத் தென் மண்டல ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.