சென்னை:

மிழக கோவில்களில்  வழங்கப்படும் பிரசாதத்திற்கு சுகாதாரத்துறையின் சான்று பெறுவது அவசியம் என்று உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள இந்துக்கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடு வாரியம் நிர்வகித்து வருகிறது. அதன்படி கட்டுப்பாடில்,  6 ஆயிரத்து 606 கோவில்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோவில் களில் 754 கோவில்களில் பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பல கோவில்களில், அந்தந்தக் கோவில்களின் பிசாரதங்களான லட்டு, முருக்கு, தட்டை, பஞ்சாமிர்தம், அதிரசம்  போன்ற உணவுப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த பிரசாதங்கள் சுகாதாரமாக தயாரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பிரசாதங்கள் தரமுடன் இருக்கும் வகையில், கோவில் பிரசாதங்களுக்கு சுகாதார சான்று பெற வேண்டும் என்று மாநில உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை  உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, முதல் கட்டமாக  தமிழகத்தில் உள்ள 46 பெரிய கோவில்களில் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், சென்னையில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில்  இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.