சென்னை

சென்னை நகரில் பேனர் விழுந்து மரணம் அடைந்த சுபஸ்ரீ விவகாரத்தில் காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் தேதி அன்று குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்னும் 23 வயதுப் பெண் பள்ளிக்கரணை அருகே சாலையில் இரு சக்க்ர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.   அந்த சாலையில் அதிமுக பிரமுகர் வீட்டுத் திருணத்தை முன்னிட்டு பானர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதில் ஒரு பானர் அறுந்து சுபஸ்ரீ மீது விழுந்தது.  தறுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் அவர் மரணம் அடைந்தார்.  இதையொட்டி மாநிலம் எங்கும் கடும் சர்ச்சை எழுந்தது.   இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் அழகு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.     இந்த நடவடிக்கைக்குச் சாலைகளின் நடுவே வைக்கப்பட்டுள்ள பானர்களை ஆய்வாளர் அகற்றாதது காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.