டெல்லி: தமிழ்நாட்டில் டெங்கு பரவல் அதிகரிதுள்ளதால், தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வு நடத்தி, அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வருகை தருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் வேளையில் டெங்கு பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது பருவ மழை காலம் தொடங்கி உள்ளதால், டெங்கு மேலும் வர வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து, டெங்கு கொசு பரவலை தடுக்கும் வகையில், மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய குழு செயல்பட உள்ளது. அதனப்டி, டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம், கேரளா, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய 9 மாநிலங்களுக்கு, மத்திய சுகாதாரத்துறையைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட சுகாதாரக் குழு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது.
இந்த குழுவினர் 9 மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கும், சிகிச்சை அளிப்பதற் கும் உரிய ஆலோசனைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.