திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  மூன்று வயது பெண் குழந்தை பலியானது.
சென்னையை அடுத்த திருவள்ளூரில், டெங்கு காய்ச்சலால் தொடர்ந்து பலர் பலியான நிலையில் நேற்று  பெண்குழந்தை ஒன்று பலியானது. ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ் பாலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரிபாபுவின்  மகள் மூன்று வயதான மன்விதா.
கடந்த சில நாட்களுக்கு முன், மன்விதாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதால்  சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு , மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், மன்விதா நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
11
வைரஸ், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் தொடர்ந்து இறந்து வருவதால், பொதுமக்களிடையே பெரும்  பீதி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் காய்ச்சல் தடுப்புக்காக சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை  பேரூராட்சிகளின் இணை இயக்குநர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.