திருச்சி:
டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி உயிரிழந்தை தொடர்ந்து, சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலையில் மறியல் நடைபெற்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 12,500 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதாக இந்திய சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருச்சி, கரூர் அருகே மணவாசி கிராமத்தைச் சேர்ந்த பூஜா என்ற சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி பூஜா உயிரிழந்தார்.
இதன் காரணமாக சிறுமியின் உறவினர்கள்,
பூஜாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் உயிரிழந்த சிறுமியின் உடலை கிடத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.