தீபாவளிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் விவரம்! இன்றே முன்பதிவு

சென்னை.

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் நெரிசலை குறைக்கும் பொருட்டு தென்னக ரெயில்வே பல்வேறு சிறப்பு ரெயில்களை பல்வேறு இடங்களுக்கு இயக்க உள்ளது.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்றுமுதல் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து தென்னக ரெயில்வே விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது,
சென்னை எழும்பூர்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில் (வண்டிஎண்:82601), சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16-ந் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.

சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரெயில் (82631), சென்னை சென்டிரலில் இருந்து வரும் 16-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

நெல்லை-சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரெயில் (82606), நெல்லையில் இருந்து வரும் 19-ந் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

நெல்லை-சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரெயில் (82602), நெல்லையில் இருந்து வரும் 22-ந் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

எர்ணாகுளம்-சென்னை சென்டிரல் சுவிதா சிறப்பு ரெயில் (82632), எர்ணாகுளத்தில் இருந்து வரும் 22-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06001), சென்னை எழும்பூரில் இருந்து வரும் 20 மற்றும் 27-ந் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.

சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06005), சென்னை சென்டிரலில் இருந்து வரும் 20, 27-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 3, 10-ந் தேதியில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

எர்ணாகுளம்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06006), எர்ணாகுளத்தில் இருந்து வரும் 18, 29-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 5, 12-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06008), நெல்லையில் இருந்து வரும் 30-ந் தேதி மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Special trains for Deepavali, Booking open today