சென்னை:

டெங்கு மரணத்தை கட்டுப்படுத்த தவறிய அரசு ஆட்சிப்பொறுப்பிலிருந்து அரசு விலக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

சமீபகாலமாக அரசுக்கு எதிராக கருத்துக்களை கூறி வரும் கமல், தற்போது டெங்கு காய்ச்சல் காரணமாக தமிழகதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டும், மரணத்தை தழுவியும் வரும் நிலையில், அரசு டெங்குவை கட்டுப்படுத்தி தவறி விட்டது.அதனால் ஆட்சியில் இருந்து அகல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில்,

செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும்.

அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்..

இவ்வாறு கூறி உள்ளார்.