மும்பை,
கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டுக்கு எந்தவிதா பயனும் கிடைக்கவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் சரமாரியாக புகார் கூறி உள்ளார்.
மும்பையில் தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.
அதில், நான் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு திட்டம் குறித்து மத்திய அரசு தன்னிடம் கூறியது. ஆனால், அதற்கு நான் எடும் எதி திர்ப்பு தெரிவித்தேன் என்றும், இந்த திட்டம் சரியான பலனை தராது என்றும், எதிர்கால பலன் குறித்து எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்தேன்.
ஆனால் மத்திய அரசு எனது கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் ஒரு அதிகாரி என்ற முறையில் எனது கருத்தை கூறத்தான் முடியும் என்றும், அரசசின் கொள்கைகளை எதிர்க்க முடியாது என்றும் கூறினார்.
வேண்டுமானால், மத்திய அரசின் அந்த திட்டத்த எதிர்த்து பதவியை ராஜினாமா மட்டுமே செய்யப்படும், இதைத்தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று கூறினார்.
நாட்டில், பணமதிப்பிழப்பு செய்ததால் பெரிய அளவில் எந்த பலனும் ஏற்படவில்லை என்றும், ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கும் முன், அதற்கு ஏற்றார்போல் புதிய ரூபாய் நோட்டுகளை தயாராக வைத்திருக்க வேண்டும், ஆனால் மோடி அரசு அப்படி செய்யாததால், இந்தியாவின் பொருளாதார நிலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் குற்றம் சாட்டினார்.
இருந்தாலும், நமது மக்கள் அதை சமாளித்து, அதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து, அதிலிருந்து மீண்டுவிட்டார்கள்.
மத்திய அரசு, ரூ.500, 1000 ஒழிப்பு திட்டத்தால், கருப்பு பணம் வெளிவரும் என்று எதிர்பார்த்து இந்த திட்டத்தை அமல்படுத்தியது. ஆனால், அரசால் கருப்பு பணத்தை கைப்பற்ற முடியவில்லை. அரசின் நடைமுறைகளால் கருப்பு பணம் இன்னும் வராமல்தான் உள்ளது.
அரசின் இந்த முடிவு காரணமாக கருப்பு பணத்தை பதுக்கியவர்கள், அதற்கான புதிய வட்டிகளை பெற்று வருகிறார்கள். பண மதிப்பிழப்பு காரணமாக ரிசர்வ் வங்கியின் ஈவு தொகை கூட இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது.
மேலும், மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பதிலாக மாற்றுவழிகளை கையாண்டிருக்கலாம். ஆனால் அதுகுறித்து மத்திய அரசு சிந்திக்க முன்வரவில்லை என்றும், இதே கருத்தைத்தான் முன்னாள் கவர்னர் ஒய்.வி. ரெட்டியும் கூறியிருந்தைதையும் சுட்டிக் காட்டினார்.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு திட்டம் காரணமாக எந்தவித பலனும் ஏற்படவில்லை என்றும், கருப்பு பணத்தையோ அல்லது வெள்ளை பணத்தையோ எதையும் மாற்றவில்லை என்று கூறிய ரகுராம்ராஜன், மக்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் என்ற விவரம் மட்டுமே தெரிந்து கொள்ள முடிந்தது என்று கூறினார்.
அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஒரு கடுமையான நடவடிக்கை என்றும், இதன் காரணமாக நாட்டின் வர்த்தகங்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளதுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி குறித்த கேள்விகு பதில் அளித்த ரகுராம்ராஜன், எனது பதவிகாலம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த பதவி ஏன் நீடிக்கப்படவில்லை என்பது பற்றி நான் எதுவும் சொல்வதற்கு இல்லை.
எனது பதவி காலம் முடிந்ததையடுத்து நான் வெளியேறிவிட்டேன். நான் ராஜினாமா எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.
ஏற்கனவே டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஹிட்லர் குறித்து பேசிய கருத்துக்கள் தவறானது என்று ஒத்துக்கொண்ட ராஜன், சகிப்பு தன்மை குறித்து பேசும்போது அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டியதாயிற்று என்றும், சகிப்பு தன்மை என்பது வளர்ச்சிக்கு முக்கியமானது என்றும் கூறினார்.
நான் எனது திட்டங்களில் ஒதுபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்றும், நான் இந்த நாட்டுக்கு வெளிப்படையாக சேவை செய்ய விரும்புகிறேன். எனக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதை செய்வேன்.
நான், ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது சில வராக்கடன்களை வசூலிப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுத்தேன். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்பட முடியவில்லை என்பதையும் ஒத்துக்கொண்ட ராஜன், கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது என்று கூறினார்.
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் சிறப்பான ஒன்று. வரி வருவாயை அதிகரிக்கும் வகையில் இது செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பொருளாதாரம் பாதித்திடாத வகையில் மென்மையான நிலையில் இதை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரின் மோடி அரசுக்கு எதிரான கருத்து தலைநகரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.