டெல்லி:
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மார்ச் 31ம் தேதிக்கு பிறகு வைத்திருந்தால்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

பணமதிப்பிறக்கம் அமலுக்கு வந்து 50 நாட்கள் முடிந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டப்படி மார்ச் 31ம் தேதிக்கு பின்னர் 500, 1000 ரூபாய் நோட்டுகள் கையில் வைத்திருப்போருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. வங்கிகள், அஞ்சலகங்களில் இந்த நோட்டுக்களைக் கொடுத்து மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூடியது.
இந்தக் கூட்டத்தில், பணமதிப்பிறக்கம் தொடர்பாக புதிய அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி மார்ச் 31ம் தேதிக்கு பின்னர் 10 பழைய ரூபாய் நோட்டுக்கள் கையில் இருந்தால் 4 ஆண்டு வரை சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.